பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் மத்துகம ஷான் என்பவரின் உதவியாளரான கீத்மால் பெனோய் டில்ஷான் என்பவர் டுபாயில் இருந்து 29.08.2024 அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் குறித்த சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
33 வயதான குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம காவல்துறை தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.