நாட்டில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் நாளொன்றுக்கு 100 மரணங்கள் பதிவாகுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தினசரி பதிவாகும் மரணங்களில் பத்துக்கு எட்டு வீதமானவை தொற்றா நோய்களினால் ஏற்படுகின்ற நிலையில் அவற்றில் அதிகமான மரணங்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் ஏற்படுகின்றது.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதற்காக நாட்டு மக்கள் நாளொன்றுக்கு 121 கோடி ரூபா செலவழிப்பதாக தெரியவந்துள்ளது.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் நாட்டில் பொருளாதார, சுகாதார மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.