கடற்றொழில்துறையுடன் தொடர்புடைய தொழில் வாய்ப்புக்காக பயிற்சி பெற்ற 120 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தென்கொரியாவிற்குச் சென்றுள்ளது.
அந்த குழுவில் 3 பெண்களும் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென்கொரிய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்காக தென்கொரிய சென்றுள்ளனர்.