( ஐ. ஏ. காதிர் கான் )
கொழும்பு – மருதானை, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் இன்று (26.08.2024) காலை டாக்டர் ஒருவர் தாக்கப்பட்டதில், பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மருதானைப் பகுதியில் வசித்து வந்த 44 வயதுடைய டாக்டர் ஒருவர் மீது, வெலிமடைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் தாக்கியதிலேயே, குறித்த டாக்டர் உயிரிழந்துள்ளதாகவும், மருதானை பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த டாக்டர் சத்தார் (வயது 44) என்பவரே, இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், இவர் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே, இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.