எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அறிவிப்பு எல்பிட்டிய பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் 26.08.2024 வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, உள்ளூராட்சி அதிகார சபையின் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் படி எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளரையும் உப தவிசாளரையும் அச்சபையின் உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்குரிய தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையேற்கும் அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி வைப்புப்பணம் கையேற்றல் 26.08.2024 தொடக்கம் செப்டம்பர் 11ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை நடைபெறும் எனவும் வேட்பு மனு கையேற்றல் செப்டம்பர் 09ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 12ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையும் காலி மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.