தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த தாய் மற்றும் அவரது மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களது சடலங்கள் 26.08.2024 அதிகாலை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெதுறு ஓயாவில் நேற்று பிற்பகல் தாயொருவரும் அவரது இரண்டு மகன்களும் நீராடச் சென்றிருந்தனர்.
அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி 25.08.2024 உயிரிழந்தார்.
ஏனைய இருவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தேடப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் தாய் மற்றும் அவரது மகன் ஒருவரின் சடலம் 26.08.2024 காலை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.