சீனாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் 14 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் பெய்த கனமழையால் இந்த அனர்த்த நிலைமை பதிவாகியுள்ளது.
வெள்ள அபாயம் காரணமாக, மாநிலத்தில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.