இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் ஜேமி ஸ்மித் 94 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம்வயதில் (24 வயது 42 நாட்கள்) சதமடித்த விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை லெஸ் அமெஸ் வைத்திருந்தார்.
அவர் கடந்த 1930இல் போர்ட் ஆப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சதம் அடித்திருந்தார்.