தாய்லாந்தில் அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை, இந்தியா, மியன்மார், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.