அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிப்பொருள் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, லங்கா ஐ.ஓ.சி, சினோபெக் மற்றும் அமெரிக்காவின் ஷெல் ஆகியோருக்குப் பிறகு இலங்கை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் நான்காவது பெற்றோலிய நிறுவனமாக அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் மாறியுள்ளது.
மேலும், யுனைடட் பெற்றோலிய நிறுவனத்திற்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், யுனைடெட் பெற்றோலியம் இலங்கையில் ‘யுனைடட் பெற்றோலியம் லங்கா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை இணைத்துக்கொண்டது.