புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டு விநியோக நடவடிக்கை 23.08.2024 முதல் அமுலுக்கு வந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தொடருந்து திணைக்களத்தின் www.pravesha.lk எனும் இணையத்தளத்தில் பயண விபரங்களை உள்ளிட்டுப் பற்று அட்டை அல்லது கடன் அட்டைமூலம் பணத்தைச் செலுத்தி பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம் செலுத்தியதன் பின்னர் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாகப் பயணச்சீட்டின் QR குறியீடு அனுப்பிவைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடருந்து நிலையத்தில் சரிபார்ப்பதுடன், பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் மாத்திரம் அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயணத் திகதிக்கு 7 நாட்களுக்கு முன்னதாக இணையத்தளம் மூலம் டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.