இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் ஜனாதிபதி தேர்தலில் வைராக்கியம், வாய்வீச்சு அரசியலை புறந்தள்ளி மக்களுக்கு உண்மையைச் சொல்லும் ரணில் விக்ரமசிங்கவுக்கு மேலும் ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நீர்கொழும்பு ஒலென்றா ஹோட்டலில் இடம்பெற்ற நீர்கொழும்பு- கட்டான தொகுதி பிரதான செயல்பாட்டளர்கள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் நாம் தலைமைத்துவம் வழங்கிய சகல விடயங்களிலும் வெற்றி பெற்றோம். அலைகளுக்காக பின்னால் சென்று மக்களுக்கு உதவி செய்யாதவர்களை கொண்டுவருவதன் மூலம் மக்களும், நாடும் பின்னடையும். கிரமாம், நகரம், நாட்டை கட்டியெழுப்பக்கூடியவரை கொண்டுவர வேண்டும். ரணிலை தவிர இதனை செய்வதற்கு யாருமில்லை.
ரணில் விக்ரமசிங்கவையும் அநுர குமார திஸாநாயக்கவையும் ஒப்பிடுகையில் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம். தொழிலோ, வியாபாரமோ செய்யாதவருக்கு நாட்டை செய்யும் அனுபவம் இருக்குமா?.
கோதாபய ராஜபக்ஷவை கொண்டுவரும் போதும் நாம் கூறினோம் கொண்டுவர வேண்டாம் என்று. மக்கள் தான் அவரை கொண்டுவந்தனர். அதன் பின்னர் நாமும் வேலை செய்தோம். இறுதியில் வேலை செய்த மக்கள் அகன்றனர். அதனால் மக்கள் முடிவு செய்ய வேண்டும் யாருக்கு இயலும் என்று.
சஜிதுக்கு நாட்டை செய்யமுடியுமா?. அவருடன் இருப்பவர்கள் கூறும் கதையைக் கேட்டால் அவர் அமைச்சை செய்த முறையை பார்த்தால் தெரியும் அவராலும் நாட்டை செய்ய முடியாது என்று.
நாடு இருக்கும் நிலையில் சர்வதேசத்துடன் தொடர்புடைய ரணில் விக்ரமசிங்கவை தவிர எவராலும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அதனால்தான் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் இணைந்துள்ளனர்.
சஜித் பிரேமதாஸாவுக்கு பாரமெடுக்குமாறு கூறியபோது ஹர்ஷ கூறினார் இதனை பொறுப்பேற்றால் மீண்டும் அதிகாரத்திற்கு வரமுடியாது என்றார். அநுரவும் முடியாது என்றார். வஜிரவுடன் நாம் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பாரமெடுக்க முடியுமா எனக்கு கேட்டபோது முடியும் என்றார்.
ரணில் இரண்டு வருடங்களில் செய்ததை இன்று உலகமே மெச்சுகின்றது. குறுகிய காலத்தில் மாற்றமடைந்த பிரதான நாடு என்கின்றனர்.
அதனால் ரணில் விக்ரமசிங்கவை தவிர யாரும் பாராளுமன்றத்தில் இல்லை. இது சஜித், அநுர, நாமல், விஜயதாஸ ஆகியோருக்கும் தெரியும்.
நாமல் ராஜபக்ஷவின் அரசியலினால்தான் மைனா கோ கம தாக்கப்பட்டு நாடே தீ பற்றி எறிந்தது. அவர்கள் செய்த வேலையால்தான் கிராமங்களில் உள்ள எமது ஆதரவாளர்களும், நாமும் பாதிக்கப்பட்டோம். நாட்டை வீழ்த்தி, பொருளாதாரத்தை நிசமாக்கியது போதாமல் வாக்குக் கேட்கவும் வருகிறார்.
கடந்த காலத்தில் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சரவை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,
அடுத்த அமைச்சரவை அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கு இனி நாட்டை செய்திருக்கலாமே. நாட்டையும் வீழ்த்தி, பொருளாதாரத்தையும் வீழ்த்தி, எம்மையும் நாசமாக்கினார்கள். எமது முப்பது வருட அரசியலையும் இல்லாமலாக்கினார்கள்.
தற்போது நாடு பயணிக்கும் முறையில் பயணிக்க ரணிலை தவிர வேறு தலைவர்கள் இல்லை. மாற்றுத் தலைமைத்துவத்தை நிணைத்தால் மூன்று ஆறு மாதங்களில் நாடு பழைய நிலைக்கு செல்லும்.
நாட்டு மக்கள் இன்று ரணில் விக்ரமசிங்கவை பற்றிப் பேசுகின்றனர். நாடு இவ்வாறு செல்லாவிட்டால் பங்களாதேஷமாக மாறிவிடும் என மக்கள் உணர்கின்றனர்.
ரணிலை பெற்றிபெறச் செய்ய பெரும்பாலான அரசியல் கட்சிகள், கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துள்ளனர் என்றார்.