கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியைகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஆசிரியர்களால் தாக்கப்பட்ட நிலையில், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் ஒன்று தொடர்பில் ஆசிரியர் ஒருவர் சிறுமியை கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் மற்றைய ஆசிரியர் வெயிலில் மண்டியிட வைத்து துடைப்பத்தால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன்போது, குறித்த சிறுமி மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அவரை தூக்கி வந்து மேசையில் விட்ட போது மாணவியின் தலையில் அடிபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.