பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலாப் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
22.08.2024 பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும், பெந்தர காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகு ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பெந்தர சுற்றுலா விடுதியொன்றிலிருந்த இருவர் விபத்தில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அளுத்கம மற்றும் பெந்தர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.