2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22.08.2024) காலமானார்.
திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில் காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.