கொழும்பு
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய நூலகம் இலவச அங்கத்துவத்தை வழங்கி வருகிறது.
ஒரு வருட காலத்துக்கான இந்த அங்கத்துவம் செப்டம்பர் முதல் (02) செப்டம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பிரிவில் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் 10 – 13 ஆம் தரத்திலான பாடசாலை மாணவர்களும் இந்த அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அங்கத்துவ அட்டைக்காக மட்டும் 200 ரூபா அறவிடப்படும்.
தேசிய நூலகம் பெரும்பாலும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு பெரிதளவில் உபயோகமாகிறது.
1976 இலிருந்து இன்று வரை வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், அரச வெளியீடுகள், ஆய்வுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் எனப் பல அச்சுப் பிரதிகளையும் அங்கத்தவர்கள் இங்கு பார்வையிட முடியும். திகதிவாரியாகவும் தலைப்பு வாரியாகவும் கூட தாம் உசாவுகின்ற விடயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். மூன்று மொழிகளிலும் வெளிவந்த பிரசுரங்களை இங்கு சென்று பார்வையிட முடியும்.