ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் 21.08.2024 அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டத்தை அனுராதபுரத்தில் நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
”ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியடையச் செய்யும் நோக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கடபனஹா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலாவது பிரச்சார கூட்டத்தை அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றமை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கிறோம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.