இலங்கையின் எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனத்துக்கும் இடையில் 20.08.2024 புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ மின் உற்பத்தி நிலையத்திற்காக, இயற்கை திரவ எரிவாயுவைச் சேமிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், எரிவாயு மீள் உருவாக்கம் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.