எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த அறிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது.