( ஐ. ஏ. காதிர் கான் )
சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை, துறைமுக பாதுகாப்புப் பிரிவினர் 18.08.2024 சுங்கத் திணைக்களத்துக்கு சொந்தமான கெப் வண்டியொன்றில் கைப்பற்றியதாக துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர், வண்டியில் இருந்த 158 வெளிநாட்டு மதுபான போத்தல்களைக் கைப்பற்றியதாகவும், துறைமுக எண் 2 எல்.பி. வாயிலில் இருந்து மதுபான போத்தல்களை வெளியே எடுக்க முயன்றதாகவும், அந்த அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன், வாகனச் சாரதியிடம் இது தொடர்பிலான வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.