ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக் கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனால் ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த 200 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஆறு மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை ரிஷாத் பதியுதீன் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்காகும்.