ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் 18.08.2024 அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடற்பகுதியில் பல எரிமலைகள் உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.