ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவுகளைக் கண்காணிக்கும் வகையில் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்திற்கு ‘வோட் மணி மீற்றர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தின் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த இணையத்தளம் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம், மற்றும் பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட ஆறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.