கொழும்பு
இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோகிராமின் விலை 2100 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவாக எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலைக்கு தேசிக்காய்களை கொள்வனவு செய்து, விற்பனை செய்ய முடியவில்லை என வர்க்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.தேசிக்காய் அருவடை குறைந்துள்ளமையே, விலை அதிகரிக்க காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.