இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2024 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மறு அறிவித்தல் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.