ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஆர்.எம்.சோஹித ராஜகருணா 16.08.2024 ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய .நிஷ்சங்க பந்துல கருணாரத்ன,வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரைஇந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.