2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் காலவகாசம் காலை 11 மணியுடன் நிறைவடைந்தது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 22 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 17 பேரும், அங்கீகரிக்கப்படாத கட்சியின் சார்பில் ஒருவரும் என 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.