இஸ்மதுல் றஹுமான்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் சிறி லங்கா சுதந்திரக் கட்சி, புதிய கூட்டணி மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒன்றினைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு இக் கூட்டணி கொழும்பு, பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று 14ம் திகதி காலை அங்குராப்பனம் செய்யப்பட்டது.பொதுஜன ஐக்கிய முன்னணியின் 21 பேர் கொண்ட தலைமைத்துவ சபையால் இது வழிநடாத்தப்படும்.
இதன் தலைவராக அநுர பிரியதர்ஷன யாப்பாவும் செயலாளராக லசந்த அழகியவண்ணவும் பொருளாளராக சாமர சம்பத் தசநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கூட்டணியின் போஷகராக ஜோன் செனவிரத்ன கடமையாற்றுவார்.
தேசிய அமைப்பாளர்களாக துமிந்த திசாநாயக்க மற்றும் நளின் பிரனாந்து செயல்படுகின்றனர்.
நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார,சுரேன் ராகவன், சட்டதரணி பைசர் முஸ்தபா, சுசில் பிரேம் ஜயந்த, நிமல் லான்ஸா, பியங்கர ஜயரத்ன, உதயகாந்த குணதிலக்க, சுதத் மஞ்சுல, ஜகத் பியங்கர, டக்லஸ் தேவானந்த, எஸ்.எம்.எம்.முஸாரப், இஷாக் றஹுமான், எஸ். வியாலேந்திரன், மொஹமட் முசம்மில், அசங்க நவரத்ன, பேராசிரியர் திஸ்ஸ விதாரன, அனூபா பெஸ்குவல், ஆளுனர்களான நஸீர் அஹமட் மற்றும் லக்ஷ்மன் யாபா அபயவர்தன, முன்னாள் இந்தியாவின் இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட, சுகீ்ஷ்வர பண்டார, டீ. கலங்சூரிய ஆகியோர் இக்கூட்டணியில் இனைந்துள்ளனர்.
இங்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் உத்தியோகபூர்வ இனையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. சகலருக்கும் மாற்றமான நோக்கு சகலருக்கும் சுபீட்சமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் People’s Alliance இனையம் உருவாக்கப்பட்டுள்ளது.