( ஐ. ஏ. காதிர் கான் )
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ச ஆகியோர் 15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், நாடெங்கினும் 100 பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
இதன்பிரகாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் 16 ஆம் திகதி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை, குருநாகலில் இருந்தும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பிரசாரக் கூட்டத்தை, 17 ஆம் திகதி அநுராதபுரத்திலிருந்தும் , தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, 17 ஆம் திகதி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை, அம்பாந்தோட்டையிலிருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை, 21 ஆம் திகதி அநுராதபுரத்திலிருந்தும் ஆரம்பிக்கவுள்ளனர்.