( ஐ. ஏ. காதிர் கான் )
“எனது உடம்பில் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை, மக்களுக்கு இரவு பகல் பாராது சேவையாற்றுவேன்” என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதி மொழி தெரிவித்துள்ளார்.
“பொது மக்கள் வெற்றி பெறும் யுகம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மஹியங்கணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.