( ஐ. ஏ. காதிர் கான் )
“வழக்குகள் விசாரணை செய்வது மட்டுல்ல, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் நீதி அமைச்சின் பங்கு முக்கியமானது” என்று, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சில் 13.08.2024 உத்தியோப்பூர்வமாக தனது கடமைகளைப் பெறுப்பேற்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு பேசும்போது,
“2020 ஆம் ஆண்டு முதல் ஐந்து அமைச்சுகளின் பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளேன். சர்வதேசத்திடம் தொடர்புகளை மேற்கொள்ளும் போது, நல்லிணக்கச் செயற்பாடு மிகவும் முக்கியமானது” என்றார்.