கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹெரவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதற்காக 6000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெரஹெர காலத்தில் அமுல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டம் மற்றும் நாளாந்த போக்குவரத்து திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.