அஷ்ரப் ஏ சமத்
கொழும்பு: சிறுவர் தினத்தினை முன்னிட்டு இவ் ஆண்டின் தொனிப்பொருளான எல்லாவற்றையும் விட பிள்ளைகளின் பெறுமதி என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகள் ஓக்டோபர் 1ஆம் திகதி மல்வானை பிரதேசத்தில் உள்ளசகல பாலர் பாடசாலைகளையும் இணைத்து பிரி ஸ்குல் எடியுகேசன் நெட்வோர்க்
திட்டத்தின் கீழ் 250க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மல்வானை அல் முபாரக் தேசிய
பாடசாலையின் மைதானத்தில் ஒன்று கூடினார்கள்.
இந் நிகழ்வில் சிறுவர்கள் ஆடல் பாடல் கலியாட்டம் போன்ற நிகழ்ச்சிகள், பியகம இலங்கை வங்கியினால் நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சித்திரம் வரைதல் ஊக்குவித்து அதில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு
சேமிப்பு உண்டியல், பேனை, பென்சில் போன்ற பரிசுப் பொருள்களும் இந் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் மாணவர்கள் ஓடி,ஆடி நீராடி மகிழ்ச்சியுட்டும் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது
இவ் ஆண்டின் சிறுவர் தினத்தின் தொனிப்பொருள் எல்லாவற்றையும் விட பிள்ளைகளின் பெறுமதி ”
என்ற தொனிப்பொருளில் கொட்டும் மழையிலும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இப்பிரதேச ஆரம்பப்பாடசாலை கல்வி அதிகாரிகள், பியகம பிரதேச செயலாளர் பிரிவின் ஆரம்ப பாடசாலை அதிகாரிகள், மற்றும பியகம, இலங்கை வங்கி ஊழியர்கள், முன்னாள் பிரதேச சபை
உறுப்பிணர் இர்பான், பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் விஜயசிங்க ஆகியோர்களும் கலந்து கொண்டு ஆசிரியைகள் மாணவர்களுக்கு விருதுகளும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைத்தார்கள்……இப்பிரதேச 9 பாலா் பாடசாலை மாணவர்கள், ஆசிரியைகள் பெற்றோர்கள் மற்றும் அனுசரனையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.