எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 16-ம் திகதி அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கும் அவர், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு வரை இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து வீரான இயன் பெல், 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42.69 சராசரியுடன் 7,727 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதன்போது, 22 டெஸ்ட் சதங்களை அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.