ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாளாக ஒகஸ்ட் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள சரண மாவத்தையைச் சுற்றியுள்ள பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் மக்கள் வேலைக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தெரிவித்துளளார்.