யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபாய் என காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.