எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் 12.08.2024 காலை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.