முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 06ஆம் திகதி தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிருவாக சேவையின் தரம் 1 ஐச் சேர்ந்த இவரை அமைச்சு புதிய பணிப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இவர் இறைவரித் திணைக்களத்தில் பணிப்பாளராகவும் அதன் பின்னர் கைத்தொழில் அமைச்சில் மேலதிக உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.