( ஐ. ஏ. காதிர் கான் )
“ஜனாதிபதித் தேர்தலில் நான் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக, சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“நான் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியை வகிக்கிறேன். இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, நான் ஒருபோதும் செயற்பட மாட்டேன்.
இதேபோல், நான் கட்சியின் தீர்மானங்கள், கட்டுக்கோப்புகளை மீறப் போவதுமில்லை.
அத்துடன், எமது கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக ஒரு போதும் நான் செயற்படப் போவதுமில்லை. தலைமைத்துவத்துடன் இணைந்து எமது முஸ்லிம் காங்கிரஸைக் கட்டி வளர்க்கும் பாரிய பொறுப்பை முன்னெடுத்துச் செல்வேன்” என்றார்.