சர்வஜன அதிகாரத்தின் 2வது வரைவின் அறிஞர்களுடனான கலந்துரையாடல் 10.08.2024 பிற்பகல் குருநாகல் கதிர்காமம் விகாரைக்கு அருகில் இடம்பெற்றது.
“ஒன்றாய் எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சி மிகு தேசம்” என்பதே இதன் கருப்பொருளாகும்.
இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் அந்த அரசியல் ஒன்றியத்தின் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, எந்தவொரு வேட்பாளரும் முன்வைக்காத தர்க்கரீதியான நடைமுறை வேலைத்திட்டத்தை சர்வஜன அதிகாரம் முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.