ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல் சின்னங்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 சின்னங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 09.08.2024 நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பானவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேசிய முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கு 112 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று வரை மொத்தம் 269 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன
அந்த முறைப்பாடுகளில் வன்முறைச் செயல்கள் தொடர்பான ஒரு முறைப்பாடும் வேறு 02 முறைப்பாடுகளும் அடங்கியுள்ளன.
ஏனைய 266 முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியவை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
றியவை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.