இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி “பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்” எனும் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 09.08.2024 பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் 2024 மே 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.