பொதுவாகவே நாளாந்தம் நாம் ஏதோ ஒரு தேவைக்காக பிளாஸ்ரிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். ஏன், தண்ணீரை கூட பிளாஸ்ரிக் போத்தல்களில் தான் அருந்துகிறோம்.
ஆனால் இந்த பிளாஸ்ரிக் பாவனை நம் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஒரு தன்மையைக் கொண்டுள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், பிளாஸ்ரிக் போத்தலில் தண்ணீர் அருந்துவது ஆபத்து என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மைக்ரோ பிளாஸ்ரிக் நமது உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்ரிக் துகள்கள் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
பிளாஸ்ரிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்பதால் இரத்த ஓட்டத்தில் நுழையும் மைக்ரோபிளாஸ்ரிக் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இரத்த ஓட்டத்தில் இருக்கும் பிளாஸ்ரிக் துகள்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிப்பதோடு உயிரைக் கொல்லும் உயிர்கொல்லியாகவும் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.