2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு மேல்நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து விடுவித்து உயர் நீதிமன்றம் 08.08.2024 தீர்ப்பளித்துள்ளது.
தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி லமாஹேவா முன்வைத்த மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற, நீதியரசர்கள் அமர்வால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.