ஊடகவியலாளர் – ஏ.சி பௌசுல் அலிம்
மினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று மிக முக்கியமான நிகழ்வாக, நவீன அறிவியல் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக, சமூக செயற்பாட்டாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான மௌலவி முனீர் முழபர் கலந்து சிறப்பித்தார். இவர் தமது உரையில், “இந்த அறிவியல் ஆய்வகம், மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும் ஒரு முக்கியமிக்க சாதனையாக இருக்கும். இத்தகைய வசதிகள் மாணவர்களின் படிப்புத் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்,” என்று தெரிவித்தார். மேலும், இந்த அறிவியல் ஆய்வகத்தை உருவாக்குவதற்கான நிதி உதவியை அவர் வழங்கியது குறிப்பிடத்த அம்சமாகும்.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக, மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி பணிப்பாளர் வாஜிர ரணராஜ பெரேரா, உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ.எம். ரிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபர், உப அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பிற நிர்வாக குழுவினரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDS), பழைய மாணவர்கள் சங்கம் (OBA & OGA) மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வகம், பாடசாலை மாணவர்களுக்கு அறிவியல் துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும் என அனைவராலும் பாராட்டப்பட்டது.