பாரிஸில் இடம்பெற்ற ஒலிம்பிக் தொடரின் 400 மீற்றர் அரையிறுதி சுற்றுக்கான ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.
இந்த போட்டி இலங்கை நேரப்படி நேற்றிரவு (06.08.2024) 11.05 மணிக்கு ஆரம்பமானது.
இதில் அருண தர்ஷன போட்டித் தூரத்தை 44.75 செக்கன்களில் கடந்து 5 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
இது அவரது தனிப்பட்ட சிறந்த ஓட்டமாகப் பதிவாகியது.
அத்துடன் குறித்த போட்டியில் ஓடுபாதை மீறலுக்காக அருண தர்ஷன தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.