அரச சேவையில் நிலவுகின்ற ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத்தால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களாலும், அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களாலும், ஒருசில ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன.
ஓய்வூதியம் பெறுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு அநீதிகள் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதன் மூலம் 83,000 அரச ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு இயலுமை கிட்டும்.
குறித்த ஓய்வுதியதாரர்களின் ஓய்வூதியம் முழுமையான சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்தபட்சம் 2,500 ரூபா அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யவுள்ளது.