நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 1,765,351 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 வாக்காளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1,024,244 வாக்காளர்களும் பதிவு செய்துள்ளனர்.
மேலும், குருநாகல் மாவட்டத்தில் 1,417,226 வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.