முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹஷன் திலகரத்ன தற்போது பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்
மேலும், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அவரது மனைவி அப்சரி திலகரத்னவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.