இலங்கையில் தகாத உறவுகள் காரணமாக ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 111,709 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 113,188 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், தகாத உறவுகளினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் 9,636 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 10,408 ஆகவும் அதிகரித்துள்ளன.
அதேவேளை கணவர் அல்லது மனைவியினால் ஏற்படும் துன்புறுத்தல்கள் , புறக்கணிப்புகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 22,584 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில்,
கணவர் மனைவி இருவருக்கும் இடையில் புரிந்துணர்வின்மை , உடலுறவின்மை, அன்பின்மை மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாகத் தகாத உறவுகள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.